தேசிய நெடுஞ்சாலைகளை கண்காணிக்க, விபத்துகளை ஆராய புதிய முயற்சி.! மத்திய அமைச்சர் தகவல்.!

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க ,  மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களை நாட உள்ளோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளை குறைக்கும் வண்ணமும், அதற்கான முக்கிய காரணிகளை ஆராயும் வண்ணமும் அதனை கண்காணிக்க, புதிய முயற்சியினை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனங்களை நாட உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், நெடுஞ்சாலை கட்டுமானத்தை கண்காணிக்கவும், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க ,  மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிக்கை தயார் செய்ய, விபத்துக்கான உண்மையான காரணத்தை களைய தனியார் நிறுவனங்களை மத்திய அரசு நாட உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதற்காக,  அரசு விரைவில் டெண்டரை தொடங்கும் எனவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைகளை ஒதுக்குவோம் எனவும், எங்களுக்கு சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்வோம் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதற்காக அரசு அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளோம் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment