புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை அறிமுகம் செய்த மத்திய அரசு…!

புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை அறிமுகம் செய்த மத்திய அரசு.

மத்திய அரசு புதிய வாகன பதிவில் BH என தொடங்கும் பதிவைண்ணை  அறிமுகம் செய்துள்ளது. ஒரு வாகனத்தை புதிதாக வாங்கும்போது அந்த வாகனத்தின் பதிவு எண் (தமிழ்நாடு – TN) என்று பதிவு செய்யப்படும். இந்த பதிவு கொண்ட வாகனங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும்போது அந்த மாநிலங்களில் வாகன பதிவு எண்ணை மாற்ற வேண்டும்.

இப்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது வாகனம் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற்ற வேண்டும் என்பதனால் மத்திய அரசு புதிதாக BH  எனத் துவங்கும் பதிவு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது  BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை வேறு எந்த மாநிலத்திலும் பயன்படுத்த வேண்டுமானால், அதன் பதிவு எண்ணை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் நிலையில், இதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என துவங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.