வெளிநாட்டில் உயிரிழந்த குழந்தைகள்.. இந்தியாவில் இருமல் மருந்துக்கான சோதனை கட்டாயம்.!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துக்கான ஆய்வக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் உஸ்பெகிஸ்தான் மற்றும் காம்பியா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 90 குழந்தைகள் உயிரிழந்தனர் என சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை அடுத்து, இந்நிலையில், தற்போது மத்திய வெளிநாட்டு ஏற்றுமதி பொது இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெயரில், இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் வரும் ஜூன் 1ஆம் தேதி  முதல் அரசு ஆய்வகங்களில் தங்கள் இருமல் மருந்துகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகு தான், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் உத்தரவு படி அதனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.