தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவாரூரில்  அமைச்சர் காமராஜ் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குறைகளை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது.புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.