#Breaking:முன்னாள் முதல்வர் தொடர்புடைய 17 இடங்கள் – சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு!

பீகார் மாநில முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே,139 கோடி டொராண்டா கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது.

இதனைத் தொடர்ந்து,கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் ஜாமீன் பெற்ற நிலையில்,முன்னதாக அவர் பீகார் முதல்வராக இருந்தபோது ஆட்சேர்ப்பில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புதிய ஊழல் வழக்கில் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும்,அவரது குடும்பத்தினர்களும் இந்த ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment