தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு 2 நாள் பயணம் மேற்கொண்டு உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு இருந்து  இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றார். அங்கு  பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்பு கேதார்நாத் குகை கோவிலில் பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார்.

மோடி தியானம் செய்த குகை பாறைகளை வெட்டி பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டது. அந்த குகையை ஒட்டி 10 அடி உயர கூரை கொண்டு கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

மேலும்  மின்சாரம் ,தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி தங்கியிருந்து குகை மக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் என தெரியவந்து உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ 990 என வாடகை விடப்படுகிறது.

கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் என்ற இணைதளம்  மூலம்  முன்பதிவு செய்யலாம் . இதற்கு முன் ஒரு நாளைக்கு 3000 வாடகைக்கு விடப்பட்டது .ஆனால் மக்கள் வருவது குறைந்ததால் பின்னர் வாடகை ரூ990 விடப்படுவதாக கூறப்படுகிறது .

குகையில் தண்ணீர் , மின்சாரம் போன்ற வசதிகளுடன் காலை உணவு ,மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது .மேலும் தனியாக தங்கி இருப்பது பிரச்சனை ஏற்பட்டால் உதவி அழைக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியானம் செய்வதற்கு  சிறந்த குகையாக  விளங்குகிறது என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here