குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! இன்றும் உயர்நீதிமன்றம் விசாரணை

குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! இன்றும் உயர்நீதிமன்றம் விசாரணை

  • dmk |
  • Edited by venu |
  • 2020-08-14 07:13:19

சட்டப்பேரவைக்கு  குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு  உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் ,நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அதில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .ஆரம்பம் முதல் தற்போது வரை அரசுபெரும்பான்மையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Latest Posts

சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் - புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!
எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்