குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

  • dmk |
  • Edited by venu |
  • 2020-08-14 15:26:47

குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு  உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அதில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .ஆரம்பம் முதல் தற்போது வரை அரசுபெரும்பான்மையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ,ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று  திமுக தரப்பில் வாதிடப்பட்டது.இறுதியாக  ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Latest Posts

Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்களை இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....