Truckdragscar

டிப்பர் லாரி மீது மோதிய கார்..! 2 கிமீ தூரம் இழுத்துச் சென்ற பயங்கரம்..!

By

டிப்பர் லாரி ஒன்று காரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் டிப்பர் லாரி ஒன்று காரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுப்பியில் சாகரில் இருந்து மங்களூரு நோக்கிச் சென்ற கார் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியுள்ளது.

இதன்பின், லாரியின் டிரைவர் பயத்தில் காரானது லாரிக்கு அடியில் சிக்கியது தெரியாமல் லாரியை வேகமாக ஒட்டியுள்ளார். பிறகு, உள்ளூர்வாசிகள் லாரியை வேகமாக பின்தொடர்ந்து டிரைவராய் தடுத்து நிறுத்தியுள்ளனர். விபத்துக்குள்ளான காரில் 3 பேர் பயன் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, விபத்து நடந்த இடத்திற்கு வந்த படுபித்ரி போலீசார் டிரைவரை கைது செய்தனர். காருக்குள் இருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Dinasuvadu Media @2023