அரசு தங்களுக்காக தாங்களே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட்-கமல்ஹாசன்

பட்ஜெட், மத்திய அரசின் சுய தேவைக்கான பட்ஜெட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  கூறுகையில், இடைக்கால பட்ஜெட், மத்திய அரசின் சுய தேவைக்கான பட்ஜெட் .அதாவது அரசு தங்களுக்காக தாங்களே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட் .இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும், எவ்வித அக்கறையினை காட்ட விரும்பவில்லை என்பது தான் உண்மை.இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளை பொருளாதார நிபுணர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment