சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிறுவன்..!

ஆவடி பகுதியில் மழைவெள்ளத்தை ஆய்வு செய்த போது, நகுல் என்ற சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை மழை நிவாரணமாக முதல்வரிடம் அளித்தார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய வருகிறார். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்பகுதி மக்கள் முதல்வருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்த நகுல் என்ற சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை மழை நிவாரணமாக முதல்வரிடம் அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட முதல்வர் அதனை அமைச்சர் நாசரிடம் அளித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.