மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சம்!

மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முதலாக 400 புள்ளிகள் உயர்ந்து, 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பால், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 342.76 (0.57%) புள்ளிகள் உயர்ந்து, 60,228.12 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90.95 (0.51%) புள்ளிகள் அதிகரித்து, 17,913.90 புள்ளிகளாக உள்ளது. கடந்த சில வாரங்களாக அந்நிய முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்