மக்களவை தேர்தல் நெருங்க இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி , பிரசாரம் என அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக , காங்கிரஸ் காட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் B.J.P_யும் வலுவான கூட்டணிக்கு திட்டமிட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் பாஜக தலைவர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க இருக்கின்றார்கள்.அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் பாஜகவின் அமித்ஷா , மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் மேற்கொள்ள இருக்கிறார்கள்.திமுக , காங்கிரஸ் கட்சிக்கு இணையான வலுவான கூட்டணி அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் , இன்று இரவு 8 மணிக்கு தமிழக பாஜக பொறுப்பாளர் மத்தியமைச்சர் பியூஸ் கோயல் வருகின்றார்.ஏற்கனவே அவர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று பாஜக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here