முதல்வர் வேட்பாளரை பாஜக கூட்டணி தான் முடிவு எடுக்கும் – சி.டி.ரவி

முதல்வர் வேட்பாளரை பாஜக கூட்டணி தான் முடிவு எடுக்கும் – சி.டி.ரவி

தேர்தலுக்கு பிறகே, அதாவது தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான், முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது.  இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் அதிமுக கூட்டணியுடன் இருந்து வருகிறோம். அந்த கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. நீங்க அதை ஏற்று கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆறு வரும்பொழுது தான் அதை நாம் கடக்க முடியும். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தான் கூடி முடிவெடுப்பார்கள் என்றும், தேர்தலுக்கு பின் பெரும்பான்மையை பொறுத்து முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், தேர்தலுக்கு பிறகே, அதாவது தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான், முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube