இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?

இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?

ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும்.

இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்!

க்ளாக் ஆப் (Clock App)
நம்மில் பலருக்கும் இந்த ஆஃப்சை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆப் மிகவும் புதுமையான ஒன்று. இதன் தோற்றம் கடிகார வடிவத்தில் இருக்கும். இதை பார்க்கும் பலருக்கும் கடிகாரத்தை பார்ப்பது போன்று தான் இருக்கும். ஆனால், இதை நாம் ரகசிய கேலரியாக பயன்படுத்த இயலும். இதில் நேரத்தை தான் பாஸ்வர்ட் போன்று நாம் செட் செய்வோம். இதில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் மிக ரகசியமாகவே இருக்கும். இதில் போட்டோ, பைல்ஸ், வீடியோ போன்ற முக்கிய தகவல்களை ரகசியமாக வைத்து கொள்ளலாம்.

ஃபையர்ஃபாக்ஸ் ஃபோகஸ் (Firefox Focus)
இந்த வகை தேடு பொறியை பலருக்கும் தெரியாது. மிகவும் பாதுகாப்பான ஆப்ஸ் வகையை சேர்ந்தது தான் இது. இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களின் தகவல்கள் திருட்டு போவதை தடுக்க இயலும். மேலும், உங்களுக்கு விளம்பரங்கள் அனைத்தையுமே இதை தடை செய்து விடும். உங்களின் எந்தவித டேட்டாவையும் வெளியிடாத ரகசிய ஆப் இதுவே.

கேண்டிட் (Candid)
மிகவும் ரகசிய வகையை சேர்ந்த ஆப் இது. இதில் ரகசியமாக நாம் வீடியோ அல்லது போட்டோ எடுக்க பயன்படுத்தலாம். இதில் வீடியோ எடுத்தாலும் கருப்பு திரையை மட்டுமே காட்டும். அதன் பின்னர் இந்த வீடியோவை இதன் கேலரியில் காண இயலும். உங்களை சுற்றி நடக்க கூடிய அதர்மங்களை இந்த உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் உருவாக்கியதே இந்த ஆப். இதை தவறான முறையில் பயன்படுத்தாதீர்.

சார்ஜ் டெஸ்ட் (Charge Test)
ஸ்மார்ட் போனை பல ஆயிரம் செலவு செய்து வாங்கினால் மட்டும் போதாது. இதன் பேட்டரியை நல்ல முறையில் பயன்படுத்த தவறுவதால் தான் குறுகிய காலத்திலே செயல் திறனை இழக்கிறது. சரியான அளவு மின்சாரம் நம் மொபைலில் செல்கிறதா என்பதை கண்டறியவே இந்த ஆப் உள்ளது. நமக்கு வர கூடிய மின்சாரம் low voltage அல்லது high voltage என்பதை இது கண்டு பிடித்து சொல்லி விடும்.

ஜாம்போர்டு (Jamboard)
இந்த ஆப்ஸை பற்றியும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒருவருடன் மொபைலில் பேசும் போதே நம்மால் அவருக்கு தெளிவான உரையாடலை எழுத்தின் மூலம் காட்டி விட முடியும். மேலும், நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல இதனை பயன்படுத்தியும் கொள்ளலாம்.
குறிப்பு : இந்த பதிவில் கூறியுள்ள அனைத்து ஆப்ஸ்களையும் நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலே இந்த பதிவி பதிவிடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *