கண்ணீரை குடிக்கும் தேனீக்கள், 28 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

6
  • தைவானை சேர்ந்த 28 வயதே ஆனா ஹீ என்ற பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்.

தைவானை சேர்ந்த 28 வயதே ஆன ஹீ என்ற பெண், செடிகளை அகற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தேனீக்கள் அவரது கண்களுக்குள் புந்துள்ளன.

ஃபூயின் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் ஹொங் ச்சி டிங் இந்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். அப்போது, நான்கு மில்லிமீட்டர் நீளமுள்ள தேனீக்களை அவற்றின் கால்களை பற்றி இழுத்துள்ளார். இது மருத்துவரை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Image result for ஹாலிக்டிடே என்று அறியப்படும் இந்த வகை தேனீக்கள்

மேலும் ஹீக்கு மறுத்தும் பார்த்த மருத்துவர் கூறுகையில், அவர் விரைவில் குணமடைவார் என்றும்,  ஹாலிக்டிடே என்று அறியப்படும் இந்த வகை தேனீக்கள் வியர்வை மணத்தால் கவரப்படுகின்றன என்றும், வியர்வை உறைந்துள்ள மக்களை நோக்கி, வருவதாகவும், கண்ணீரில் இருக்கின்ற அதிக புரதத்தால் இவை கண்ணீரை குடிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். .