27 C
Chennai
Tuesday, October 26, 2021

இந்த வீரர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கும்படி கேட்டுக்கொண்ட பிசிசிஐ..!

சஞ்சு சாம்சன், அவேஷ் கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கேட்டுக்கொண்டது.

ஐபிஎல் தொடரின் 2-ம் பாதி தொடங்குவதற்கு முன்னரே டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கானஅணியில்  இடம்பெற்றிருந்த இஷான் கிஷன்,  சூரியகுமார் யாதவ், புவனேஷ் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா பெரிய அளவில் விளையாடவில்லை. இதனால், அணியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்பட்டது.

மும்பை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் இஷான் கிஷன்,  சூரியகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தித்தனர். பந்துவீச்சில் புவனேஷ் குமார், முகமது ஷமி தங்களது திறமையை கடைசியாக விளையாடிய போட்டிகளில் நிரூபித்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா சரியாக விளையாடாதது ரசிங்கர்களுக்கு வருத்தமாகவே உள்ளது.

இந்நிலையில்,  ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த  சில வீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டது. அதன்படி, சஞ்சு சாம்சன், அவேஷ் கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது. அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாடுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் மறு அறிவிப்பு வரும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது அணி ஐபிஎல்லில் இருந்து அக்டோபர் 7 அன்று வெளியேறியபோது நடப்பு ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்சன் 14 போட்டிகளில் 40.33 சராசரியில் 484 ரன்கள் எடுத்தார். மறுபுறம், அவேஷ் வேகமான வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். தற்போதைய ஐபிஎல் சீசனில், டெல்லிக்காக அவர் இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) பிறகு அதிக விக்கெட் வீழ்த்தியவர் அவேஷ் கான் ஆவார். அவேஷ் டெஸ்ட் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுண்டி அணிக்கு எதிரான இந்தியாவின் பயிற்சி போட்டியில் அவரது விரலில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவேஷ் சுற்றுப்பயணத்தின் நடுவில் இருந்து திரும்ப வேண்டியிருந்தது.

அதே நேரத்தில், ஹர்திக் பாண்டியா டி 20 உலகக் கோப்பையில் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. ஏனெனில் முதுகு பிரச்சனையால் அவர் இப்போது பந்துவீசும் நிலையில் இல்லை என கூறப்படுகிறது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். வெங்கடேஷ், தனது முதல் சீசனில் விளையாடி, 8 போட்டிகளில் 37.85 சராசரியில் 265 ரன்கள் எடுத்துள்ளார். இதன் போது, ​​வெங்கடேஷ் இரண்டு அரை சதங்களை அடித்துளளார். இதனுடன், அவர் 8 போட்டிகளில் மொத்தம் 3 விக்கெட்டுகளை வீழ்த்திஉள்ளார்.

முன்னதாக, பிசிசிஐ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை டி -20 உலகக் கோப்பை அணியில் நெட் பந்து வீச்சாளராக சேர்த்திருந்தது. ஐபிஎல் 2021 இல் 21 வயதான உம்ரான் மாலிக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 152.95 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இதுவே நடப்பு சீசனின் வேகமான வீசப்பட்ட பந்து என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More