தவான் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருவதாக பிசிசிஐ அறிவித்தது!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தவான் அபாரமாக சதமடித்து சாதனை புரிந்தார்.இப்போட்டியில் ஆஸ்திரேலியாஅணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தவான் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் குவித்தார்.இந்நிலையில் அன்றைய போட்டியில் கூட தவானுக்கு பதில் ஜடேஜா களமிறங்கினர். வருகின்ற 13-ம் தேதி நியூசிலாந்து அணியுடன் ,இந்திய அணி மோத உள்ளது.நேற்று  தவானுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.


இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளது. அதில் ஷிகர் தவான் மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது உள்ளதாகவும், அவர் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணியின் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாகவும், அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளனர்.
 

author avatar
murugan