தமிழகம் முழுவதும் சாலைகளில் பேனர்கள் வைக்க  தடை…!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிகத்தில் தற்போது பரவி வரும் கலச்சாரமாக பேனர் உருவாகியுள்ளது.சாலைகளை மறித்து பேனர் வைப்பது,போன்ற மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப்படுதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நேற்று விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்  கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 

Image result for பேனர்
பேனர் வைப்பது குறித்து மாநகராட்சியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் பேனர் வைக்கின்ற எந்த அரசியல் கட்சியினர் மீதும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை அவ்வாறு இருந்தாலும் பேனர் வைக்கப்படுகின்ற போது ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், அதை யார் பிரிண்ட் செய்கிறார்கள்.மேலும் எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டுதுள்ளது என்ற விவரங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்க வேண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினர்.மேலும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள் விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும்.
 
இதற்கு முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் விதிமீறி வைக்கப்படுகின்ற பேனர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு உள்ளதா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்யுங்கள்,  பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று அரசு அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பான விரிவான விளக்கத்தை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர பிறப்பித்தனர்.

இவ்வாறு கடுமையாக கண்டனத்தை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டன எதிரொலியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை தண்டனை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்தார்.மேலும் விதிமீறல் பேனர் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில்  டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது.பேனர் தொடர்பான விதிகளை பின்பற்றுவோம் என தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். விதிமீறல் பேனர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பின்னர் அரசு தரப்பில் இனி வரும் காலங்களில் விதிகளை மீறி பேனர்களை வைக்காமல் பார்த்துக் கொள்கிறோம்  என்று தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசு உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Leave a Comment