மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு! – நிதியமைச்சர்

வரும் ஜூன் மாதம் இந்த நூலகம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு. 

திமுக தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சர்வதேசத் தரத்தில், 114 கோடி ரூபாய் செலவில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் இந்த நூலகம் திறப்பு 

இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடரில், வரும் ஜூன் மாதம் இந்த நூலகம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment