7 வருடத்திற்கு முன் விமர்சனம் செய்தவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்த நடிகை..!

நடிகை ஜாமீலா ஜாமில் கடந்த 7 வருடத்திற்கு முன் தனது கர்ப்பத்தை கலைத்து

By murugan | Published: Dec 09, 2019 07:16 AM

  • நடிகை ஜாமீலா ஜாமில் கடந்த 7 வருடத்திற்கு முன் தனது கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.
  • அப்போது விமர்சனம் செய்தவர்களுக்கு ,கிண்டல் செய்தவர்களுக்கு ஜாமீலா ஜாமில் தற்போது பதிலடி கொடுத்து உள்ளார்.
லண்டனை சார்ந்த நடிகை ஜாமீலா ஜாமில் கடந்த 7 வருடத்திற்கு முன் கர்ப்பமாக இருந்த நிலையில் அந்த கருவை கலைத்து உள்ளார்.இது குறித்து ஜாமீலா ஜாமில் கூறுகையில்,என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.மேலும் இந்த முடிவு எனக்கும் எனது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் நல்லது. நான் உணர்வு ரீதியாகவும் ,உளவியல் ரீதியாகவும் இது போன்ற விஷயத்தில் சிக்கி கொள்ள விரும்பவில்லை என கூறினார்.இவரின் இந்த பதிலுக்கு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் பலர் ஒரு குழந்தையின் உயிரை அழிப்பது தவறு. உங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது. உங்களுக்கு வாழ்க்கை தோல்வி மட்டுமே கிடைக்கும் என்று விமர்சனம் செய்தனர். அதற்கு ஏற்றார் போல அவர் அடுத்த சில வருடங்களில் நிதி நெருக்கடியில் சிக்கினார். மேலும் தனக்கு மார்பகப் புற்று நோய் வந்துவிடுமோ எனவும் மனரீதியாக அஞ்சினர். பின்னர் அவர் அமெரிக்காவில் சென்றார். அங்கிருந்து மீண்டும் நடிக்க பல வாய்ப்புகளை கிடைத்தது. இதனால் மீண்டும் அதிக அளவில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். இதையடுத்து தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் நான் கருக்கலைப்பு செய்தது தொடர்பாக ஆயிரக்கணக்கான என்னை விமர்சனம் செய்தனர். மேலும் நான் மோசமானவள் என கூறினார்கள். ஆனால் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். கோடிஸ்வரியாக மாறியுள்ளேன்.எனது பணி சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. எல்லோருக்கும் நன்றிகள் என பதிலடி கொடுத்திருந்தார்.  
Step2: Place in ads Display sections

unicc