43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!

43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது.

இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டில் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.