புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது!

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 26ம் தேதி தொடங்கி, அன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, 2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 – 8% இருக்கும் நிலையில் புதுவையின் வருவாய் 10% வளர்ச்சி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இதன்பின் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் மற்றும் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளட்டவற்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்