,

140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை.!

By

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே  140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.  

கிரிக்கெட் உலகின் மிக பாரம்பரிய மிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரக ஒரு போர் கிரிக்கெட் போல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டெஸ்ட் தொடர் தான் ஆஷஸ் தொடர், இந்த போட்டியானது 1882 முதல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆஷஸ் தொடரானது இங்கிலாந்து – ஆஷ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் உலககோப்பைக்கு இணையான ஒரு கௌரவ போட்டியாகவே கருதப்படுகிறது. 1882ஆம் ஆண்டு முதல் 2022வரையில் நடைபெற்ற 72 ஆஷஸ் தொடரில் 34இல் ஆஸ்திரேலிய அணியும்,  32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இன்று இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி இன்று பார்மிங்காம் மைதானத்தில் துவங்க உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையினா இங்கிலாந்து அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இதில் களம் காண்கின்றனர்.