11.3 C
London
Saturday, October 16, 2021

‘தட் #தமிழ்நாடுடா மொமெண்ட்’ – ஒத்த ஒட்டு வாங்கிய பாஜகவை விமர்சித்து ஜோதிமணி எம்.பி ட்வீட்…!

பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை விட, அதைக்கண்டு தமிழ்நாடு அடைந்த அளவற்ற மகிழ்ச்சி முக்கியமானது.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர், ஒரே ஒரு வாக்கு பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இவரது குடும்பத்தில் மொத்தம் 5 வாக்குகள் உள்ள நிலையில், ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்ததால் பாஜக வேட்பாளர் அதிர்ச்சிக்குள்ளானார்.

இந்நிலையில், ஒரு ஒட்டு மட்டும் வாங்கிய பாஜக வேட்பாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், ஜோதிமணி எம்.பி. அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை விட, அதைக்கண்டு தமிழ்நாடு அடைந்த அளவற்ற மகிழ்ச்சி முக்கியமானது.’ என பதிவிட்டு, தட் #தமிழ்நாடுடா மொமெண்ட், #ஒத்த ஓட்டு பாஜக என ஹேஸ்டேக் கொடுத்துள்ளார். 

spot_imgspot_img

Hot Topics

Read More