பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். அது யார் தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.
தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் நாளுக்கு நாள் படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே செல்கிறார்.

தற்போது, இணையத்தில் உலா வரும் ஒரு நம்பத்தக்க தகவலின் படி, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ‘லியோ’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் போல் தெரிகிறது. அதனை அவர் தனது ட்விட்டர் பயோவிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், அவர் காஷ்மீர் செட்யூலில் ஒரு நாள் படமாக்கினார் என்றும், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் எடுத்த கொண்ட புகைப்படம் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு யூடியூப் சேனல்களில் நகைச்சுவை தோற்றத்தில் தோன்றிய பிரதீப் முத்து, ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘வீட்ல விஷேஷம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஐபிஎல் மற்றும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகளில் நகைச்சுவை நிறைந்த தமிழ் கமெண்ட் கொடுத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானவர்.

லியோ:
லோகேஷ் இயக்கத்தில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க, விஜய், த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கதிர், பிரியா ஆனந்த், ஜிவிஎம் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த கேங்ஸ்டர் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.