சுல்தானை எனக்கு சிறந்த திரைப்படமாக மாற்றியமைத்த யுவன் சங்கர் ராஜாக்கு நன்றி..!!

சுல்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்த யுவனிற்கு இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் ட்வீட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். 

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விகேவ் மேர்வின் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். மேலும் பின்னணி இசை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தில் இசையமைப்பாளர் யுவன் பின்னணி இசையமைத்துள்ளதால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில் அவர் தெரிவித்திருப்பது ” சுல்தானை எனக்கு சிறந்த திரைப்படமாக மாற்றியமைத்த யுவன் சங்கர் ராஜாக்கு எனது நன்றிகள். இது, உங்களின் மந்திரத்தால் காவியத்தை உணர்ந்தது. உங்கள் இசை, சுல்தான் படத்தின் கிரீடமாக இருக்கும். பார்வையாளர்களுடன் அந்த படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை”. என்று தெரிவித்துள்ளார்.