ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு நன்றி – மத்திய உள்துறை அமைச்சர் ட்வீட்.!

ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு நன்றி – மத்திய உள்துறை அமைச்சர் ட்வீட்.!

74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்த ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி), 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. என்.சி மற்றும் பி.டி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி மொத்தம் 110 இடங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்த ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாக்களித்த ஜம்மு–காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றும் ஜம்மு–காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி அரசு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube