10 ஆம் தேர்வை ஒத்திவைத்ததற்கு நன்றி – நடிகர் விவேக் ட்வீட்!

10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்ததற்காக நடிகர் விவேக் தமிழக அரசுக்கும்,மாண்பு மிகு முதல்வருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் ஊரடங்கு இந்திய முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தியது. 

அதில் ஒன்றாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடுபட்ட தேர்வும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.ஆனால், தற்பொழுது 10 ஆம் வகுப்புக்கான தேர்வை 15 நாட்களுக்கு அரசு தள்ளி வைத்துள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக், 10ஆம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்து … மாணவருக்கும் பெற்றோருக்கும் சற்று ஆசுவாசம் தந்த தமிழக அரசுக்கும்,மாண்பு மிகு முதல்வருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு, 

 

author avatar
Rebekal