“THANK YOU MODI JI” – விளக்குகளை ஏற்றி பிரதமருக்கு நன்றி தெரிவித்த மக்கள்…!

பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5000 கோடியில் புதிய பாலத்தை கட்ட நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.