2021ல் கதை முடிய போகிறது??…தேம்ஸ்  நதி போல் வைகை..?

லண்டன் தேம்ஸ்  நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறையின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 2021 தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது ஒரு செய்தியை பரப்பி அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின். சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.

 அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்கிற துணிச்சல் முடிவை எடுத்தவர் நம் முதல்வர்.மேலும் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக 10ம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர்

5 முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மதுரைக்கு ஒரு வளர்ச்சியை செய்யவில்லை. தற்போது அதிமுக  ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது.

விரைவில் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது.அதே போல் லண்டன் தேம்ஸ்  நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது.

போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் மதுரையில் இருக்காது. கலாம் சொன்னது போல  அதிமுகவில் முதல்வராக வேண்டும் என்று நீங்களும் கனவு காணுங்கள்  அதிமுக ஆட்சியில் முதல்வராக உங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

என்று தெரிவித்த அவர் மின்சாரக் கம்பிகள்  மீது துணி காய போட்ட காலம், திமுக ஆட்சி காலம். திமுக ஒரு ரவுடி கட்சி அதுபோல ஒரு அரசியல் கட்சி இருக்கவே கூடாது, அதை ஒழிக்கும் வரை அதிமுக ஓயவே ஓயாது.திமுகவை அளிக்கும் சக்தி இளைஞர்கள் நீங்களாகிய நீங்கள் தான். திமுகவின் கதை 2021ல் முடியப் போகிறதுஎன்று பேசினார்.

 
kavitha

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

3 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

6 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

7 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

54 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

1 hour ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago