பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமுடன் இணையும் தளபதி.!

தளபதியின் 66வது பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய்

By ragi | Published: May 30, 2020 05:14 PM

தளபதியின் 66வது பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி அவரது அடுத்தடுத்த படங்களை குறித்த அப்டேட்களையும் அறிய ஆவலாக உள்ளனர். 

சமீபத்தில் தளபதியின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது தளபதியின் 66வது படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டெமால் ஷைன் இந்தியா தயாரிக்க போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இவர்களுடன் ஸ்ரீ தேனாண்டள் பிலிம்ஸ் இணைந்து தயாரிப்பதாகவும், இந்த படம் மூலம் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் களமுறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் விஜய்யிடம் நடைப்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த தகவல் உண்மையா என்று இதுவரை தெரியவில்லை.

Step2: Place in ads Display sections

unicc