தளபதி 65 படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர்..!!

தளபதி 65 படத்திற்கான ரசிகர்கள் எடிட் செய்த மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது.

விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடித்து வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில், பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரசிகர்கள் எடிட் செய்த மோஷன் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.