தல – தளபதி சந்திப்பு..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் தோனி இருவரும் சந்தித்துள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோவில்  விஜய் நடிக்கும் பீஸ்ட் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படம் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறுகின்றன. இதனையடுத்து படப்பிடிப்பின் போது இருவரும் சந்துதித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.