மீண்டும் தல – தளபதி படங்கள் மோதவுள்ளதா?! தளபதி 64 & தல 60 புது அப்டேட்!

தல அஜித் தளபதி விஜய் நடிப்பில் படங்கள் வெளியாகினால் அன்றைய நாளை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்! இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் வெளியானால் ஊரே திருவிழா போல இருக்கும்.

அப்படித்தான் 2014ஆம் ஆண்டு தல நடிப்பில் வீரம் திரைப்படமும், தளபதி விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது அதே போல மீண்டும் ஓர் ஆரோக்கியமான மோதல் உருவாக்கவுள்ளது.

அதாவது அஜித்தின் 60 வது படத்தை நேர்கொண்ட பார்வை படத்தினை எடுத்துக்கொண்டிருக்கும் வினோத் இயக்க போனிகபூர் மீண்டும் தயாரிக்க உள்ளார் இப்படம் 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற செய்தியும், தளபதி விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இந்தப்படமும் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment