தல அஜித் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

தல அஜித் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

நடிகர் அஜித்குமார் அவர்கள் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக் கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் அஜித்தின் அடுத்த மூன்று திரைப்படங்களை பற்றி தகவல் இணையத்தளத்தில் பரவி வருகிறது, அந்த வகையில் அஜித்தின் 61வது படத்தை இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்குவதாகவும் அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது அது மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகிறது, மேலும் அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube