தல அஜித் சொக்க தங்கமுங்க, சூப்பர் ஸ்டார் ரேன்ஜூக்கு உயர காரணம் தலயின் உழைப்பு.!

அஜித் அவர்கள் நடித்த அவள் வருவாளா படத்தை இயக்கிய ராஜ்கபூர் தல அவர்களை சுத்தமான தங்கம் என்றும், அவரது கடினமான உழைப்பே அவரது உயரத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .

இந்த நிலையில் தற்போது அஜித் அவர்களை  பிரபல இயக்குநரான ராஜ்கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இவர் அஜித்தின் ஆனந்த் பூங்காற்றே, அவள் வருவாளா ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். அதாவது அஜித் அவர்கள் சொக்க தங்கம் என்றும், அவரது கடினமான உழைப்பால் மட்டுமே இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது கடினமான உழைப்பால் தான் தல அஜித் அவர்களை சூப்பர் ஸ்டார் என்ற ஒரு ரேன்ஜில் உட்கார வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.