மீண்டும்ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க உள்ளாரா அஜித்?! தல 61 அப்டேட்!

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும்

By manikandan | Published: Sep 04, 2019 08:45 AM

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தல அஜித்தின் 60 வது படமாகும். இந்த படத்தையும் நேர்கொண்டபர்வை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த வருடம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தல-61 படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தல அஜித் இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தை பார்த்துள்ளாராம். இந்த படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாம். தீரன் கதை போல ஒரு வழக்கை சுற்றி நடைபெறும் கதையாக இப்படம் இருக்கும். அதனால் இப்படத்தில் அஜீத் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை போனி கபூரிடம் உள்ளது. அதனால் மீண்டும் மூன்றாவது முறையாக அவர் தயாரிப்பில் நடிப்பாரா அல்லது வேறு தயாரிப்பளர் இப்படத்தை தயாரிக்கிறாரா என தெரியவில்லை. அதற்குள் தல அஜித் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி, விக்னேஷ் சிவன், வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன் ஆகியோரிடம் கதை கேட்டு உள்ளதாகவும் இதில் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Step2: Place in ads Display sections

unicc