தல 62 படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல். 

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 -வது படத்தை மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தையும்,  தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், தகவல்கள் பரவி வருகிறது. வலிமை படப்பிடிப்பு முடிந்தவுடன் தல 61 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தல 61 படத்தை தொடர்ந்து தல 62 படம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது, அதாவது அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.