கேட்டதைக்கொடுக்கும் தைப்பூச விரதம் கடைபிடிக்கும் வழிமுறையும்- பலன்களும்..!

இன்று தைப்பூசம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.முருகனுக்கு உரிய விஷேசமான நாட்களில் இந்நாளும் ஒன்று.தைப்பூச தினத்தில் அந்த அழகனை நினைந்து உருகும் அடியார்களுக்கு சொல்லி வரமளித்து வருகிறார் முருகன் இதனை வார்த்தையால் அறிந்து கொள்ள முடியாது அனுபவத்தினால் அறியலாம் அதற்கும் அவனின் அருளால் தான் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை இதனை அறிந்தவர்கள் அதிகம்.அவ்வாறு தை மாதத்தில் பூச நட்சத்திரமும்,பவுர்ணமிதிதியும் இணைந்து வரும் நாளில் தான் தைபூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நாளில் அய்யனுக்கு விரதமிருந்து அவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம் இவ்விரதத்தை மேற்கொள்ள நினப்பவர்கள் காலையில் நீராடி நெற்றியில் திருநீறு பூசி  விரதம் மேற்கொள்வர் உங்களது பூஜையறையில் விளக்கேற்றி மால்மருகனுக்கு செந்நிற மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும் அன்று முழுவதும் பாலன் தேவராய சுவாமி அருளியுள கந்தஷஷ்டி கவசம்,அருணகிரிநாதர் அருளிய கந்தர்அனுபூதி,கந்தர் அலங்காரம் கந்தகுரு கவசம் போன்ற பாடல்களை பாடி  தீபாரனை காட்டவேண்டும்.காலை மற்றும் இரவில் விரதத்தை மேற்கொள்பவர்கள் உணவை தவிர்க்க வேண்டும்.மதியம் எளிய உணவு உண்ணலாம். பட்டினி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் காலையிலும்,இரவிலும்,பால் பழம் போன்ற எதாவது சாப்பிடலாம்,மாலை நேரத்தில் முருகன் சன்னியிக்கு விளக்கேற்றி பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும்.எந்த நோக்கத்திற்காக இவ்விரத்தினை மேற்கொள்கிறீர்களோ அதை அந்த அழகன் அருள்வர் மேலும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதனால் திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.இன்று அய்யனை வழிபட்டு ஆனந்தத்தை வர வழைத்துக் கொள்ளுவோம்..அரோகரா…

author avatar
kavitha