தாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான்! நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்!

நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம். தாய் என்றாலே அன்பின் உருவம் என்று

By leena | Published: Jul 04, 2020 10:57 AM

நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம். தாய் என்றாலே அன்பின் உருவம் என்று தான் சொல்ல வேண்டும். விலங்கானாலும் சரி, மனிதனானாலும் சரி, தனது குழந்தையின் மீது காட்டும் பாசம் தனி பாசமாய் தான் இருக்கும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலாமல் தவித்துள்ளது. இதனையடுத்து, அந்த குட்டி யானை தனது தாயுடன் சென்றுவிட வேண்டும் என பல முயற்சிகள் எடுத்த போதிலும், அந்த குட்டியானையால் தாண்ட முடியவில்லை.  தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து தனது தும்பிக்கையால் குட்டி யானை மேலே வர உதவி செய்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது தாய் யானையின் பாசம்.
Step2: Place in ads Display sections

unicc