டெஸ்ட் தரவரிசை – பும்ரா முன்னேற்றம்.!

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி வேக பந்து வீச்சாளர் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 779 புள்ளிகள் பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளார். NZvIND தொடரில் 14 விக்கெட்டுகளுடன், டிம் சவுதி 4வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்களை பேட் கம்மிங்ஸ், நீல் வாக்னர் மற்றும் ஜேசன் ஹோல்டர் பிடித்துள்ளனர். மேலும் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி வீரர் ட்ரெண்ட் போல்ட் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.