பாரிஸில் மக்களை உறையவைத்த பயங்கர சத்தம்.. இதுதான் காரணம்!

பாரிஸில் திடீரென ஏற்பட்ட சத்தத்தால் அங்குள்ள மக்கள் உறைந்து போகினார்கள்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த சத்தம் ஒலித்தது. இந்த சத்தத்தால் அங்குள்ள அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்த சத்தம் சில வினாடிகள் நீடித்ததால், குண்டுவெடித்தால் இந்த சத்தம் ஏற்பட்டது என மக்கள் உறைந்து போகினார்கள்.

இந்த சத்தம் காரணமாக, பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒரு போட்டி, சில வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்த சத்தத்தால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சத்தம் குறித்து பாரிஸ் போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், நகரில் குண்டு ஏதுவும் வெடிக்கவில்லை எனவும், இது அதிநவீன போர் விமானத்தின் சத்தம். இந்த சத்தம், நகரம் முழுவதும் கேட்டதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.