,

உலகையே உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்..! 1923 முதல் 2023 வரை…

By

உலக அளவில் இது வரை பல பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொருள் சேதம் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கின்றனர். அந்த வகையில் அதிக ரெக்டர் அளவில் பதிவாகி, அதிக உயிர் சேதங்களை ஏற்படுத்திய நிலநடுக்கங்களில் சிலவற்றை காணலாம்.

   
   

ஜப்பான் (1923) :

ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ என்று அழைக்கப்படும் பூகம்பம்,செப்டம்பர் 1-1923 இல் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவுகளில் 7.9 முதல் 8.2 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் 40 அடி உயரத்திற்கு சுனாமியை ஏற்படுத்தியது.

great kanto earthquake

சீனா (1956) :

சீனாவில் உள்ள ஷாங்சியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலகில் இதுவரை இல்லாத பயங்கரமான நிலநடுக்கத்தில் ஒன்றாக உள்ளது. ஷாங்சி பகுதியில் ஜனவரி 23, 1956 அன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 830,000 ஆக உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் தொகை சுமார் 60% குறைந்தது.

China 1956 Earthqua

தென் அமெரிக்கா (1960):

தென் அமெரிக்கா நாடான சிலியில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் உலக அளவில் இதுவரை இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய வலுமிக்க நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.5 ரிக்டர் என செய்யப்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 6000 ஆக உள்ளது.

South America 1960 Earthquake

ஆப்கானிஸ்தான் (1998) :

ஆப்கானிஸ்தானில் உள்ள குஷ் பகுதியில் 1998 ஆம் ஆண்டு இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் தகார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,300 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சில மாதங்களில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கத்தில் 4,700 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியது.

Afghanistan 1998 Earthquake

இந்தோனேசியா (2004) :

இந்தோனேஷியாவின் சுபத்ரா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உலக அளவில் பதிவாகிய மூன்றாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசியா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள 2,27,899 மக்கள் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.1 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியது. இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 15லிருந்து 30 மீட்டர் உயரம் வரை உள்ள சுனாமி ஏற்பட்டது.

Indonesia 2004 Earthquake

காஷ்மீர் (2005) :

பாகிஸ்தான் பகுதியில் உள்ள அசாத் காஷ்மீரில் 2005, அக்டோபர் 8 ஆம் தேதி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முசாபராபாத் பகுதியை மையமாக கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 86,000 அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Kashmir 2005 Earthquake

சீனா (2008) :

2008 ஆம் ஆண்டு தென்மேற்கு சீனாவின் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 68,636 பேர் உட்பட 87,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 374,176 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியது.

China 2008 Earthquake

ஹெய்டி (2010) :

கரீபியன் இல் உள்ள ஹெய்டி என்ற நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவரை இல்லாத அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆக உள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணிக்க முடியவில்லை. 2010 ஆம் ஆண்டு ஹெய்டி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,20,000 லிருந்து 3,16,000 ஆக உள்ளது.

Haiti 2010 Earthquake

நேபாளம் (2015) :

2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கோர்க்கா பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. 1934-இல் ஏற்பட்ட பேரழிவிற்கு பிறகு இந்த பூகம்பம் நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவாக உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது இதில் 8,964 பேர் உயிரிழந்தனர் மற்றும் 21,952 பேர் காயமடைந்தனர். இதனால் மலையோர கிராமங்களில் 98% வீடுகள் சேதமடைந்தன.

Nepal 2015 Earthquake

ஆப்கானிஸ்தான் (2022) :

2022 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி தெற்கு ஆப்கானிஸ்தானின் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த நாடகம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற விக்டர் அளவில் பதிவாகியது. இதில் 1,000 த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Afghanistan 2022 Earthquake

துருக்கி மற்றும் சிரியா (2023) :

துருக்கியில் நேற்றிலிருந்து இன்றுவரை  4-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8, 7.6, 6.0, 5.6 என்ற ரிக்டர் அளவுகளில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 த்தை கடந்துள்ளது.

Turkey and Syria earthquake 1

Dinasuvadu Media @2023