சென்னை  திருவல்லிக்கேணியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கணையான வாசவி . கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மாணவர் நவீத் அகமது என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நவீன்தை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று அவரிடம் இருந்த ஐஃபோன் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து  சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் விசாரணையில்  காதலி வாசவி ஆள் வைத்து கடத்தியது தெரியவந்தது. நவீத் அகமதுவிற்கும் , தனக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக வாசவி  கூறியுள்ளார்.

மேலும்  தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக நவீத் அகமது மிரட்டினார்.என வாசவி குற்றம் சாட்டியுள்ளார். அகமது  செல்போனில் இருக்கும் புகைப்படங்களை அழிப்பதற்காகவே இது போன்று செய்ததாக  வாசுவி  கூறியுள்ளார்.

இதனால் போலீசார் கடத்தல் ஈடுபட்ட  குற்றத்திற்காக வாசுவி கைது செய்தனர். மேலும் வாசுவிவிற்கு  உதவிய  வட பழனி மகளிர் தலைமை காவலர் மகன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here