டென்னிஸ் ‘ஹால் ஆஃப் ஃபேமர்’ ஷெர்லி ஃப்ரை இர்வின் காலமானார்….!

டென்னிஸ் ‘ஹால் ஆஃப் ஃபேமர்’ ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக காலமானார்.

அமெரிக்காவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 13 ஆம் தேதியன்று காலமானார்.அவருக்கு வயது 94 ஆகும்.அவரது மரணம் செவ்வாயன்று சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

1941 ஆம் ஆண்டு,ஷெர்லி ஃப்ரை தனது 14 வயதில், யு.எஸ். தேசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்தார். நான்கு முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ஒற்றையர் பட்டங்களை வென்ற 10 பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

1950 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முக்கிய பட்டங்களை வென்று டெமர்ஸ் ‘ஹால் ஆஃப் ஃபேமர்’ ஆனார்.

அதன்பின்னர்,1951 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது நண்பர் மற்றும் இரட்டையர் கூட்டாளரான டோரிஸ் ஹார்ட்டை தோற்கடித்து ஒற்றையர் பட்டத்தை ஷெர்லி ஃப்ரை வென்றார்.

இதனையடுத்து,வைட்மேன் கோப்பையில் அமெரிக்கா சார்பாக விளையாட அழைக்கப்பட்டபோது, 1956 ஆம் ஆண்டு 28 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும்,ஓய்வு பெறுவதற்கு முன்பு,அந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் யு.எஸ். சாம்பியன்ஷிப், மற்றும் 1957 இல் ஆஸ்திரேலிய சாம்பியன்ஷிப் என தொடர்ந்து மூன்று முக்கிய பட்டங்களை அவர் வென்றார்.இதன்மூலம் 1956 ஆம் ஆண்டில், ஃப்ரை உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும் 12 கிராண்ட்ஸ்லாம் மகளிர் இரட்டையர் பட்டங்களையும் ஒரு கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் கிரீடத்தையும் வென்றார்.இதனால்,1946 முதல் 1956 வரை, அவர் முதல் 10 இடங்களை ஒன்பது முறை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.