, ,

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.! சிரமத்திற்கு ஆளான பயணிகள்..!

By

metro

சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதால், விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் பயணிகள் கோயம்பேடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.