கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை மையம்..!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலானது ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நீடிக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கவுள்ளது . கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த மாதத்தில் அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா, டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஈரோடு, தர்மபுரி, சேலம் , கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.