தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது  -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

24

தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது  என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

இன்று அறிவாலயத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார்.டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல்  அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம். பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கிக் கொண்டனர்.

தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை.தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது  என்று தெரிவித்துள்ளார்.