தெலுங்கானாவில் ஓர் மின்சார குடும்பம்! பொருட்காட்சி போல புதிய பல்புகளோடு குவிந்த மக்கள்!

மின்சாரம் தேவையில்லை, வயர் தேவையில்லை. நன்கு எரியும் பல்ப் மட்டும் போதும், அந்த குழந்தைகளிடம் கொடுத்தால் அதனை எரிய வைத்து விடுவார்கள்.

 

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசன்னா எனும் ஊரில் உள்ளவர்தான் ஷேக் ஷான் பாட்ஷா. இவர் வீட்டில் எறிந்த பல்ப் வீணாக, புதிய பல்ப் ஒன்று வாங்கி வந்துள்ளார். அதனை அவரின் குழந்தைகள் எடுத்து விளையாடி உள்ளனர்.

 

அப்போது வந்து பார்த்த ஷேக் ஷான் பாட்ஷாவிற்கு அதிர்ச்சி. காரணம், அந்த பல்ப்கள் வயர், மின்சாரம் ஏதுமின்றி தன் குழந்தையின் வெறும் கைகளில் எரிந்து கொண்டிருந்தன.  இதனை பார்த்த அவர், மீண்டும் ஒரு பல்ப் வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துள்ளார். அப்போதும் அது எரிந்து உள்ளது.

தற்போது, தினமும் பொருட்காட்சி போல, ஒவ்வொருவரும் புது பல்ப் வாங்கி கொடுத்து, அது எரிவதை பார்த்து செல்கின்றனர்.

இதேபோல ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் எனும் ஊரில் ஒரு சிறுவன் மீது இதே போல மின்சாரம் வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.